Connect with us

Raj News Tamil

ஒரே படத்தில் ஒன்றாக நடிக்கும் கமல் – விஜய்!

சினிமா

ஒரே படத்தில் ஒன்றாக நடிக்கும் கமல் – விஜய்!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த திரைப்படம், இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில், நடிகர் கமல் சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல், விஜய் மற்றும் கமல் ரசிகர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top