Connect with us

Raj News Tamil

லோகேஷ் கனகராஜை கழுவி ஊற்றிய விஜயின் தந்தை!

சினிமா

லோகேஷ் கனகராஜை கழுவி ஊற்றிய விஜயின் தந்தை!

தளபதி விஜயின் தந்தையும், இயக்குநருமானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், திரைப்படம் ஒன்றின், செய்தியாளர் சந்திப்பில் சமீபத்தில் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், பிரபல இயக்குநர் ஒருவரை சரமாரியாக விமர்சித்தார்.

அதாவது, “இயக்குநர் ஒருவருக்கு செல்போனில் அழைப்பு விடுத்து பேசினேன். அதில், உங்களுடைய படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி தொய்வாக இருக்கிறது.

மேலும், மகளை தந்தையே பலி கொடுக்கும் விஷயங்கள், நீங்கள் குறிப்பிடும் மதத்தில் இல்லை. அதனை மாற்றினால் நன்றாக இருக்கும் என கூறினேன்” என்று எஸ்.ஏ.சி தெரிவித்தார்.

இதனை வைத்து பார்க்கும்போது, லியோ படத்தை இயக்கிய, லோகேஷ் கனகராஜை தான், இவர் கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

More in சினிமா

To Top