Connect with us

Raj News Tamil

மாவீரன் படத்தின் டிரைலர் எப்போது? – வெளியான நச் தகவல்!

சினிமா

மாவீரன் படத்தின் டிரைலர் எப்போது? – வெளியான நச் தகவல்!

மண்டேலா படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மடோன் அஸ்வீன். இந்த படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனை வைத்து, மாவீரன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில், மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஜூலை 14-ஆம் தேதி அன்று இந்த படம் வெளியாக உள்ளது.

ரிலீசுக்கு சில நாட்களே இன்னும் இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, இந்த படத்தின் இரண்டாவது சிங்கில் பாடலான வண்ணாரப்பேட்டையிலே, நாளை வெளியாக உள்ளது.

இதுமட்டுமின்றி, டிரைலர் தொடர்பான அப்டேட்டும், தற்போது வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, வரும் ஜூலை 2-ஆம் தேதி அன்று, இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாம். வடசென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட பூர்வகுடிகளை மையப்படுத்தி, இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top