Connect with us

Raj News Tamil

மாரி செல்வராஜ் பண்ண தப்பு! மொக்கை வாங்கும் உதயநிதி!

சினிமா

மாரி செல்வராஜ் பண்ண தப்பு! மொக்கை வாங்கும் உதயநிதி!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பகத் பாசிலின் கதாபாத்திரம், பலராலும் பாராட்டப்பட்டது.

ஆனால், தற்போது இந்த கதாபாத்திரம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு, சாதிய வன்மத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக மாற்றியுள்ளது.

அதாவது, சாதிய பெருமை பேசும் பாடல்களை, பகத் பாசில் காட்சியுடன் எடிட் செய்து, இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். மேலும், அவர் தான் அந்த படத்தின் ஹீரோ என்பது போலவும், கூறி வருகின்றனர்.

இவ்வாறு செய்வது, அந்த படத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது. உதயநிதியின் கதாபாத்திரத்தை, வலுவற்றதாக உருவாக்கியதே, இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top