Connect with us

Raj News Tamil

நெருங்கி வந்த ரசிகர்.. கடும் கோபம் அடைந்த ஸ்ருதி ஹாசன்!

சினிமா

நெருங்கி வந்த ரசிகர்.. கடும் கோபம் அடைந்த ஸ்ருதி ஹாசன்!

சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள், பொது இடங்களுக்கு வரும்போது, ரசிகர்கள் அத்துமீறி நடப்பது வழக்கம்.

இந்த மாதிரியான ரசிகர்களை, சில நடிகைகள் கூலாகவும், சில நடிகைகள் ஆக்ரோஷமாக கையாள்வார்கள்.

அந்த வகையில், பிரபல நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு, இப்படியான நிகழ்வு ஒன்று, தற்போது நடந்துள்ளது.

அதாவது, நடிகை ஸ்ருதி ஹாசன், மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். தனது காரை எடுப்பதற்காக, வாகன நிறுத்தும் இடத்திற்கு சென்றபோது, ரசிகர் ஒருவர், ஸ்ருதி ஹாசனை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இதனை கண்டு ஆத்திரம் அடைந்த அவர்,“உங்களை யார் என்று எனக்கு தெரியாது, தயவு செஞ்சு இங்கிருந்து கிளம்புங்க” என கடும் கோபத்துடன் கூறினார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top