Connect with us

Raj News Tamil

மாமன்னன் படத்தின் டிரைலர் நாளைக்கு! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

சினிமா

மாமன்னன் படத்தின் டிரைலர் நாளைக்கு! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

பரியேறும் பெருமாள், கா்ணன் ஆகிய படங்களுக்கு பிறகு, மாரி செல்வராஜ் இயக்கி வரும் திரைப்படம், மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. ரிலீசுக்கு சில நாட்களே இருப்பதால் படத்தின் புரமோஷன் பணிகளை, படக்குழுவினர் விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டிரைலர் வெளியாகும் நேரத்தை, இதுவரை படக்குழுவினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top