Connect with us

Raj News Tamil

மாரி செல்வராஜை விமர்சித்த மோகன் ஜி!

சினிமா

மாரி செல்வராஜை விமர்சித்த மோகன் ஜி!

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில், உருவான திரைப்படம் மாமன்னன். இந்த படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், கமலின் தேவர் மகன் படத்தை விமர்சித்ததாக, சமீபத்தில் தகவல் பரவி வந்தது.

இதனால், பலரும் மாரி செல்வராஜ்-க்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், திரௌபதி இயக்குநர் மோகன் ஜி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஓர் ஆழமான தென் மாவட்ட கதையை யாரும் சொல்லாததே இந்தத் திரைப்படத்தின் தனித்தன்மை..

எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் #தேவர்மகன் என்று கூறியுள்ளார். இந்த பதிவு, மாரி செல்வராஜ்-க்கு மோகன் ஜி கொடுத்த பதிலடி என்று கூறப்பட்டு வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top