Connect with us

Raj News Tamil

“போடா மயி**னு போயிடுங்க” – கமல் படத்தை விமர்சித்த மாரி செல்வராஜ்!

சினிமா

“போடா மயி**னு போயிடுங்க” – கமல் படத்தை விமர்சித்த மாரி செல்வராஜ்!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது, உதயநிதி ஸ்டாலினை மையமாக வைத்து, மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம், வரும் ஜூன் 29-ஆம் தேதி அன்று, உலகம் முழுவதும், வெளியாக உள்ளது. இந்நிலையில், மாரி செல்வராஜின் பழைய வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பேசிய அவர், பாபநாசம் படத்தில், இளம்பெண்ணை தவறாக வீடியோ எடுத்து, ஒருவர் மிரட்டுவார். அதற்கு நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அந்த பெண்ணிடம் யாரும் கூறியிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு காட்சி, ஒரு இடத்தில் கூட இடம்பெற்றிருக்காது.

இது தவறான விஷயம்.. எவனாவது உன்னை வீடியோ எடுத்து மிரட்டினால், போடா என்று கடந்துவிட வேண்டும் என மாரி செல்வராஜ் பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top