Connect with us

Raj News Tamil

மார்க் ஆண்டனி இயக்குநருக்கு பரிசு கொடுத்த தயாரிப்பாளர்!

சினிமா

மார்க் ஆண்டனி இயக்குநருக்கு பரிசு கொடுத்த தயாரிப்பாளர்!

த்ரிஷா இல்லைனா நயன்தாரா, AAA, பஹீரா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது. மேலும், 100 கோடி ரூபாய் வசூலித்து, வசூல் சாதனையும் புரிந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, தயாரிப்பாளர் வினோத் குமார் BMW காரை பரிசாக வழங்கியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஆதிக் ரவிச்சந்திரன், விஷாலுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top