Connect with us

Raj News Tamil

18 வருடங்களுக்கு பிறகு அதிரடி முடிவு.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்..

சினிமா

18 வருடங்களுக்கு பிறகு அதிரடி முடிவு.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்..

த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்திற்கு பிறகு, தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வந்த இவர், மார்க் ஆண்டனி மூலம், பெரிய கம்பேக் கொடுத்திருந்தார்.

இதையடுத்து, நடிகர் அஜித்தை வைத்து, குட் பேட் அக்லி என்ற படத்தை எடுக்க உள்ளார். வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள இப்படம், வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜித் 3 வேடங்களில் நடிக்க உள்ளதாக, தற்போது தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான வரலாறு படத்தில், 3 வேடங்களில் அஜித் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top