Connect with us

Raj News Tamil

இன்று மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

தமிழகம்

இன்று மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

தொடா் விடுமுறையை முன்னிட்டு, (செப்.15) இன்று இரவு 8 முதல் 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

வரும் திங்கட்கிழமை (18-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையிலிருந்து முன்கூட்டியே சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவையில் இன்று ஒருநாள் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில், அதாவது இரவு 8 -10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் 9 நிமிடம் என்பதற்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top