Connect with us

Raj News Tamil

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!

தமிழகம்

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு-ஓசூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More in தமிழகம்

To Top