Connect with us

Raj News Tamil

தனுஷ் இல்லை.. சிம்பு தான்.. – திடீர் ட்விஸ்ட் தந்த நெல்சன்!

சினிமா

தனுஷ் இல்லை.. சிம்பு தான்.. – திடீர் ட்விஸ்ட் தந்த நெல்சன்!

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை எடுத்துள்ளவர் இயக்குநர் நெல்சன். இவர் தற்போது ரஜினியை வைத்து, ஜெயிலர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம், வரும் ஆகஸ்டு 10-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு, நடிகர் தனுஷை வைத்து, புதிய படம் ஒன்றை அவர் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், தனுஷ்-க்கு பதிலாக, சிம்பு உடன், நெல்சன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சில காரணங்களால் கைவிடப்பட்ட வேட்டை மன்னன் படத்தை தான், அவர் மீண்டும் தொடங்க உள்ளாராம்.

இதுதொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல், சிம்புவின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top