Connect with us

Raj News Tamil

ODI WC 2023: இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!

விளையாட்டு

ODI WC 2023: இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள, இந்தியா -பாகிஸ்தான் ஆட்டம், அகமதாபாதில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இந்தியாவில் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 10 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒருநாள் உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய 7 போட்டிகளிலும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. இன்றும் இது தொடர வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More in விளையாட்டு

To Top