Connect with us

Raj News Tamil

இன்னொரு சூப்பர் ஹிட் படத்தை கெடுக்க வரும் பாலிவுட்! மாரி செல்வராஜ் படத்திற்கு சோதனை?

சினிமா

இன்னொரு சூப்பர் ஹிட் படத்தை கெடுக்க வரும் பாலிவுட்! மாரி செல்வராஜ் படத்திற்கு சோதனை?

தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பல்வேறு படங்களை, ரீமேக் செய்கிறேன் என்ற பெயரில், பாலிவுட் திரையுலகினர் நாசம் செய்து வருகிறார்கள். இதற்கு உதாரணமாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படத்தை, போலா என்ற பெயரில், மிகவும் மோசமாக எடுத்து, சொதப்பி விட்டார்கள்.

இதேபோல், அஜித் நடித்திருந்த வீரம் திரைப்படத்தை, சல்மான் கானை ஹீரோவாக வைத்து, எடுத்தனர். ஆனால், அந்த படமும் பலத்தை அடியை பெற்றுவிட்டது. தற்போது, தமிழில் வெளியான இன்னொரு சூப்பர் ஹிட் படத்தையும், இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படம் பரியேறும் பெருமாள்.

பெரும் வெற்றியை பெற்ற இந்த படம், இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. கரன் ஜேஹர் தயாரிக்கும் இந்த படத்தில், சித்தார்த் சதுர்வேதி, திருப்தி திம்ரி ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த தகவலை அறிந்த தமிழ் ரசிகர்கள், இந்த படத்திலாவது, ஐட்டம் சாங், ஆக்ஷன் காட்சிகள் என்று சொதப்பிடாதீங்க என்று கூறி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top