Connect with us

Raj News Tamil

பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்!

தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு நிபந்தனைகள் இன்றி அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பரிசுத்தொகை, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

சர்க்கரை அட்டைதாரர்கள், பொருள் இல்லாத அட்டைதாரர்கள் தவிர்த்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் யாராக இருந்தாலும் அரிசி அட்டைதாரராக இருந்தால் அவர்களுக்கு ரூ.1,000 பரிசு தொகை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 பணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், பெரிய கருப்பன், சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனைதொடர்ந்து, மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் தொடங்கி வைக்க உள்ளனர். தமிழகம் முழுவதும் 2,19,57402 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

இன்று முதல் வரும் 14-ந் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகையை ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top