Connect with us

Raj News Tamil

CSK-வில் ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல் இணைந்தனர்!

விளையாட்டு

CSK-வில் ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல் இணைந்தனர்!

ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான ஏலம் துபையில் நடைபெற்று வருகின்றன. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை ரூ.1.80 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

இந்திய ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது. இதற்கு முன்பும் ஷர்துல் சென்னை அணிக்கு ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது.

More in விளையாட்டு

To Top