Connect with us

Raj News Tamil

விடுதலை படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்..!

சினிமா

விடுதலை படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்..!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விடுதலை. விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் சூரியின் சினிமா கேரியரில் விடுதலை திரைப்படம் நல்ல திருப்புமுனை என்று சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலை படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விடுதலை, இதுவரை தமிழ்த்திரையுலகம் பார்த்திராத கதைக்களம்.இது ஒரு திரைக்காவியம் என புகழ்ந்து தள்ளியுள்ளார். தொடர்ந்து 2-வது பாகத்திற்காக ஆவலுடன் காக்துக் கொண்டிருக்கிறேன் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top