Connect with us

Raj News Tamil

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: மும்பை அணியில் ஹார்திக் பாண்டியா!

விளையாட்டு

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: மும்பை அணியில் ஹார்திக் பாண்டியா!

குஜராத் அணியிடம் இருந்து ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு முன்னதாக, ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

இதற்கிடையே அணிகள் வீரர்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் நவ.26-ஆம் தேதி மாலை 5 மணி அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக வாங்கியுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

More in விளையாட்டு

To Top