Connect with us

Raj News Tamil

கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் சீரியல் நடிகை!

சினிமா

கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் சீரியல் நடிகை!

சின்னத்திரையில் நடித்துவிட்டால், வெள்ளத்திரையில் வாய்ப்புகள் கிடைக்காது என்ற நிலை முன்பு இருந்தது.

அந்த நிலையை, நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் முறியடித்து, வெள்ளதிரையிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல், நடிகைகளில், பிரியா பவானி சங்கர், வானி போஜன் ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, இந்த வரிசையில், இன்னொரு சின்னத்திரை நடிகையும் இணைந்துள்ளார்.

அதாவது, ஈரமான ரோஜாவே சீரியலின் 2-ஆம் பாகத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சுவாதி. இவருக்கு, கார்த்தியின் 27-வது திரைப்படத்தில், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தை, இயக்குநர் பிரேம்குமார் தான் இயக்க உள்ளார். இந்த தகவலை அறிந்த சுவாதியின் ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top