Connect with us

Raj News Tamil

“அட்லீ என்னை ஏமாத்திட்டாரு” – சாக்ஷி அகர்வால்-ஆல் பரபரப்பு!

சினிமா

“அட்லீ என்னை ஏமாத்திட்டாரு” – சாக்ஷி அகர்வால்-ஆல் பரபரப்பு!

பிரபல ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு பிரபலம் அடைந்தவர் சாக்ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, ஒருசில படங்களில் நடித்த இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், இயக்குநர் அட்லீ தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார். அதாவது, “ ராஜா ராணி படத்தில், இரண்டாவது கதாநாயகியாக, நான் தான் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன்.

இரண்டு நாட்கள் ஷீட்டிங்கில் கலந்துக் கொண்டேன். ஆனால், அதன்பிறகு, என்னை அவர்கள் அழைக்கவே இல்லை.

இறுதியில் பார்த்தால், அந்த திரைப்படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு, ரிலீசே ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top