Connect with us

Raj News Tamil

பிரபல மாஸ் ஹீரோவின் கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

சினிமா

பிரபல மாஸ் ஹீரோவின் கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தர்பார் படத்தின் தோல்விக்கு பிறகு, இவரது மார்கெட் பாதாளத்திற்கே சென்றுவிட்டது என்று கூறலாம்.

எந்த நடிகரிடம் கதை கூறினாலும், அந்த திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இவ்வாறு இருக்க, நடிகர் சிவகார்த்திகேயனுடன், ஏ.ஆர்.முருகதாஸ் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் ஷாருக்கானுக்காக தான் அவர் இந்த கதையை தயார் செய்து வைத்திருந்தாராம்.

ஆனால், அவருக்கு அந்த கதை பிடிக்காததால், தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், மிருனாள் தாக்கூர் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top