Connect with us

Raj News Tamil

எஸ்.ஜே.சூர்யாக்கு மனநோய் உள்ளது – அதிர்ச்சி தந்த விஷால்

சினிமா

எஸ்.ஜே.சூர்யாக்கு மனநோய் உள்ளது – அதிர்ச்சி தந்த விஷால்

விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி.

இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “நடிகர் எஸ்.ஜே.சூர்யா-க்கு, OCD எனும் மனநோய் உள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்சனையின் காரணமாக, படப்பிடிப்பில் தனது உதவியாளர்களை, எஸ்.ஜே.சூர்யா திட்டிக் கொண்டே இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

OCD என்பது நரம்பியல் தொடர்பான குறைபாடு ஆகும். இதில் பலவகைகள் உண்டு. தற்போது, எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏற்பட்டுள்ள ஓசிடி-யின் வகை என்னவென்றால், தூய்மை தொடர்பான பயம் ஆகும்..

More in சினிமா

To Top