Connect with us

Raj News Tamil

“வெற்றிமாறன் வேலைக்கு ஆக மாட்டாரு” – வேறொரு பிரபல இயக்குநருக்கு வாய்ப்பு தந்த சூர்யா..!

சினிமா

“வெற்றிமாறன் வேலைக்கு ஆக மாட்டாரு” – வேறொரு பிரபல இயக்குநருக்கு வாய்ப்பு தந்த சூர்யா..!

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு, கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த படத்தில், 10-க்கும் மேற்பட்ட கெட்டப்களில், சூர்யா நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் சூர்யா, கங்குவா படத்தை முடித்துவிட்டு, வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கு முடிவு செய்திருந்தார்.

ஆனால், விடுதலை 2-ஆம் பாகத்தின் பணிகளில் வெற்றிமாறன் பிசியாக இருப்பதால், அதற்குள் இயக்குநர் சுதா கொங்காராவின் படத்தில் நடிக்கலாம் என்று சூர்யா முடிவு செய்துள்ளாராம்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும், வாடிவாசல் படம் தொடங்காமல் இருப்பதால், சூர்யாவின் ரசிகர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top