Connect with us

Raj News Tamil

தங்கலான் படத்தின் சூப்பர் அப்டேட்!

சினிமா

தங்கலான் படத்தின் சூப்பர் அப்டேட்!

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு, பா.ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் தங்கலான். கே.ஜி.எப் கதைக் களத்தை கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் விக்ரம் நடித்து வருகிறார்.

படத்தின் ஷீட்டிங் முடிந்து, பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான ஸ்டியோ க்ரீன், தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தங்கலான் படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான முக்கிய அப்டேட், இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அப்டேட்டுக்காக காத்திருந்து வருகின்றனர்.

அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ஜெயிலர், லியோ ஆகிய இரண்டு படங்களும், கலவையான விமர்சனங்களை பெற்று, ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றியது.

இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் விரக்தியில் உள்ள சினிமா ரசிகர்கள், இந்த படமாவது நன்றாக இருக்குமா? என்று ஏக்கத்துடன் காத்துக்கிடக்கின்றனர்.

More in சினிமா

To Top