Connect with us

Raj News Tamil

தங்கலான் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

சினிமா

தங்கலான் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

சார்பட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரமை வைத்து இயக்கி வரும் திரைப்படம் தங்கலான்.

கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, 118 நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் ஷீட்டிங், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம், இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம் என்றும், இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரும் சிறப்பானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல் நாளின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், இறுதி நாளின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், அவர் வெளியிட்டுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top