Connect with us

Raj News Tamil

சென்னையில் தக்காளியின் விலை ரூ.200-ஐ தொடும்!

தமிழகம்

சென்னையில் தக்காளியின் விலை ரூ.200-ஐ தொடும்!

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெயில் மற்றும் திடீர் மழை காரணமாக இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளதால் தமிழ்நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் தக்காளி விலை சற்று குறைந்து ரூ.85-க்கு விற்கப்பட்டது. மேலும், பண்ணை பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து படிப்படியாக விலை குறையும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் தக்காளி விலை குறையாமல் ஒருசில நாள்களிலேயே உச்சத்தை எட்டியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் வியாழக்கிழமை ஒரே நாளில் ரூ.30 உயா்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் வரத்து மேலும் குறைந்தது. வழக்கமாக 60 லாரிகளில் வரும் தக்காளி, 23 லாரிகளில் மட்டுமே கொண்டுவரப்பட்டது. இதனால் தரத்தின் அடிப்படையில் ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டது.

விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் சென்னைக்குட்பட்ட பெரும்பாலான சில்லறை வியாபாரிகள் குறைந்த அளவிலான தக்காளியை மட்டுமே வாங்கி சென்றனா். சில்லறை விற்பனையில் குறைந்த தரத்திலான தக்காளி ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் ஒருசில நாள்களில் தக்காளி விலை ரூ.200-ஐ எட்டும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

More in தமிழகம்

To Top