Connect with us

Raj News Tamil

இன்று இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 4-ஆவது டி20 போட்டி!

விளையாட்டு

இன்று இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 4-ஆவது டி20 போட்டி!

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதுவரையிலான 3 ஆட்டங்களில் முதலிரண்டில் மேற்கிந்தியத் தீவுகள் வென்று முன்னிலை பெற்றிருக்க, 3-ஆவது ஆட்டத்தில் வென்ற இந்தியா தொடரில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தற்போது இந்த 4-ஆவது ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா இருக்க, மேற்கிந்தியத் தீவுகளோ இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி-20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ரோவ்மேன் போவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், தொடரை இழக்க கூடாது நோக்கத்துடன் ஹர்திக் பாண்ட்யா தலைமயிலான இந்திய அணியும் களமிறங்க உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More in விளையாட்டு

To Top