Connect with us

Raj News Tamil

ரயில் பெட்டி சாலையில் கவிழ்ந்து விபத்து..!

இந்தியா

ரயில் பெட்டி சாலையில் கவிழ்ந்து விபத்து..!

பீகாரின் பாகல்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே லோஹியாவில், ரயில் பெட்டியை ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தால் யாருக்கும், எந்த வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்கள் கூடியதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மால்டா கோட்ட ரயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள உணவகத்துக்காக இந்த ரயில் பெட்டி கொண்டு வரப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை, லக்னோவில் இருந்து அசாமுக்கு ஒரு டிரைலர் லாரியில் விமான பாகம் கொண்டு செல்லப்பட்டபோது, பீகார் வழியே செல்லும் போது ஒரு பாலத்தின் அடியில் அந்த விமான பாகம் சிக்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரயில் பெட்டி சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top