Connect with us

Raj News Tamil

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிடலாம் – நீதிபதி

சினிமா

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிடலாம் – நீதிபதி

Twin Throttler என்ற Youtube சேனலில், பைக்கில் பயணம் செய்வது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, பிரபலம் அடைந்தவர் டி.டி.எஃப் வாசன்.

பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வந்த இவர், சமீபத்தில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த கைது நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த டிடிஎப் வாசன் தரப்பு, ஜாமின் கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அந்த மனுவையும், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, விபத்தை ஏற்படுத்திய வாசனின் பைக்கை எரித்துவிடலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும், அவரது Youtube பக்கத்தை முடக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டிடிஎஃப் வாசனின் ஹேஷ்டேக்கும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More in சினிமா

To Top