Connect with us

திமுகவில் இணையும் வானதி சீனிவாசன்? கொளுத்திப் போட்ட சவுக்கு சங்கர்!

அரசியல்

திமுகவில் இணையும் வானதி சீனிவாசன்? கொளுத்திப் போட்ட சவுக்கு சங்கர்!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர் தற்போது கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்து வருகிறார். மேலும் பாஜக தேசிய மகளிரணி தலைவராகவும் பொறுப்பு வகித்தும் வருகிறார்.

இந்நிலையில் வானதி சீனிவாசன் திமுகவில் விரைவில் சேர உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” கட்சி தலைமை தம்மை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், சமீபகாலமாக கட்சியில் தமக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் வானதி சீனிவாசன் வருந்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தமது எம்எல்ஏ பதவியை விரைவில் ராஜினாமா செய்யக்கூடும் எனவும், அதன் பின்னர் கூடிய விரைவில் வானதி சீனிவாசன் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது என அவர் கூறியுள்ளார். சவுக்கு சங்கரின் இந்த பதிவால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top