Connect with us

Raj News Tamil

17 வருடங்கள் கழித்து வெளியான பிறகும் வசூலில் மாஸ் காட்டும் வேட்டையாடு விளையாடு

சினிமா

17 வருடங்கள் கழித்து வெளியான பிறகும் வசூலில் மாஸ் காட்டும் வேட்டையாடு விளையாடு

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமல்ஹாசன், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது.

17 வருடங்கள் கழித்து மீண்டும் வெளியான கமலின் வேட்டையாடு விளையாடு படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. வேட்டையாடு விளையாடு படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி இப்படம் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top