Connect with us

Raj News Tamil

விக்ரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. தங்கலான் ஷீட்டிங்கில் நடந்த விபத்து!

சினிமா

விக்ரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. தங்கலான் ஷீட்டிங்கில் நடந்த விபத்து!

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்கு பிறகு, தங்கலான் என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, KGF-ல் நடைபெற்ற நிலையில், தற்போது அது முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான பின்னணி பணிகள் நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக, படப்பிடிப்பை துரிதமாக முடிப்பதற்கு, ஒத்திகை நடத்தப்பட்டு வந்தது.

அப்போது ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக, விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு மாத காலத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று விக்ரமுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை அறிந்த விக்ரம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக, தங்கலான் படத்தின் வெளியீடு தாமதம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top