Connect with us

Raj News Tamil

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய விஷால்.. வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்..

சினிமா

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய விஷால்.. வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்..

விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. பெரும் வெற்றியை பெற்றுள்ள இப்படம், 100 கோடி ரூபாய் வரை, வசூலித்தது.

இவ்வாறு இருக்க, சமீபத்தில் பேசிய விஷால், 4, 5 கோடி வைத்திருக்கும் சிறிய தயாரிப்பாளர்கள், சினிமா எடுக்க வராதீர்கள்.

அதனை வைத்து நிலம் ஏதாவது வாங்குங்கள், உங்கள் குழந்தைகளுக்காக வங்கியில் டெபாசிட் செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.

இவரது இந்த பேச்சு, சிறு தயாரிப்பாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, எனக்கு என்டே கிடையாது என்ற படத்தின் தயாரிப்பாளர், நடிகர் விஷாலுக்கு, தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், யார் படம் எடுக்க வேண்டும், யார் எடுக்கக் கூடாது என்று சொல்வதற்கு, யாருக்கும் உரிமை இல்லை என்றும், இதுவும் ஒருவகையிலான சனாதனம் என்றும், அந்த தயாரிப்பாளர் கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top