Connect with us

Raj News Tamil

பொங்கல் ரேஸில் வெற்றி யாருக்கு? வசூல் நிலவரம்!

சினிமா

பொங்கல் ரேஸில் வெற்றி யாருக்கு? வசூல் நிலவரம்!

2024-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி, அயலான், கேப்டன் மில்லர், மிஷன் ஆகிய 3 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியாகின. இதில், 3 படங்களும், கலவையான விமர்சனங்களை தான் பெற்றன.

குறிப்பாக, அயலான் திரைப்படத்திற்கு தான் அதிகமான அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த 3 படங்களின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி, மிஷன் படம், இதுவரை 19 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். கேப்டன் மில்லர் திரைப்படம், இதுவரை 72 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.

ஆனால், அயலான் திரைப்படம், 77 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம். வசூலில் அயலான் முந்தியிருந்தாலும், பட்ஜெட்டின் படி பார்க்கும்போது, இப்படம் பெரும் நஷ்டத்தையே கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top