Connect with us

Raj News Tamil

தேனாம்பேட்டைக்கு வருமா ‘யு’ வடிவ மேம்பாலம்?

தமிழகம்

தேனாம்பேட்டைக்கு வருமா ‘யு’ வடிவ மேம்பாலம்?

மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ‘யு’ வடிவ மேம்பாலம் கட்டும்பணி துவங்கப்பட்டது.

மத்திய கைலாஷ் பகுதியில் ‘எல்’ வடிவதிலும் ஓ.எம்.ஆர் இந்திரா நகர் சந்திப்பு, டைடல் பார்க் பகுதியில் ‘யு’ வடிவத்திலும் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் இந்திரா நகர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘யு’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதே போன்ற ‘யு’ வடிவ மேம்பாலம் தேனாம்பேட்டை பகுதியில் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் தேனாம்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலை மற்றும் பாண்டி பஜார் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் டி.எம்.எஸ் பகுதி முதல் நந்தனம் செல்லும் வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.

எனவே தேனாம்பேட்டை பகுதியில் ‘யு’ வடிவ மேம்பாலம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும் என அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More in தமிழகம்

To Top