Connect with us

Raj News Tamil

யாரடி நீ மோகினி பட நடிகர் மரணம்!

சினிமா

யாரடி நீ மோகினி பட நடிகர் மரணம்!

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் கே.விஸ்வநாத். தெலுங்கு மொழியில் இவர் இயக்கிய சங்கராபரணம், ஸ்ரீவெண்ணிலா போன்ற படங்கள், சினிமா ரசிகர்களால், இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி, நடிப்பதிலும் ஆர்வம் கொண்ட இவர், தமிழில், ‘குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா, உத்தம வில்லன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 93 வயதாகும் இவர், வயது மூப்பு காரணமாக, கடந்த சில காலமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டுக் கிடந்தார்.

இந்நிலையில், இன்று காலை விஸ்வநாத் காலமானார். இதனை அறிந்த சினிமா திரையுலகினர் பலரும், ஆழ்ந்த இரங்கல் கூறி வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகர் கமல், மாஸ்டருக்கு என்னுடைய சல்யூட்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும் என்றும், வாழ்க அவரது கலை என்றும் நடிகர் கமல் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top