Connect with us

Raj News Tamil

த்ரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர்!

சினிமா

த்ரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர்!

பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த படத்தில், குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை த்ரிஷாவும், தன்னுடைய பங்கிற்கு, புரோமோஷன் செய்து வந்தார்.

அதன் ஒரு பகுதியாக, த்ரிஷா என்ற தன்னுடைய ட்விட்டர் கணக்கின் பெயரை, குந்தவை என்று மாற்றியிருந்தார். இதனால், அவருக்கு வழங்கப்பட்டிருந்த ப்ளு டிக், தற்போது மறைந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த த்ரிஷா, மீண்டும் தன்னுடைய பெயரை, த்ரிஷா என்றே மாற்றினார். இருப்பினும், மீண்டும் அவருக்கு ப்ளு டிக் வழங்கப்படவில்லை. ட்விட்டர் நிறுவனத்தின் புதிய விதிகளின் படி, தங்களுடைய பெயரை பிரபலங்கள் மாற்றினால், ப்ளு டிக் மறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top