Connect with us

Raj News Tamil

தீனா படத்தில் நடிக்க இருந்தது இவரா? நடிச்சிருந்தா இவரு தான் தல!

சினிமா

தீனா படத்தில் நடிக்க இருந்தது இவரா? நடிச்சிருந்தா இவரு தான் தல!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் தீனா.

கடந்த 2001-ஆம் ஆண்டு அன்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படத்தில் இருந்து தான், நடிகர் அஜித்குமாருக்கு “தல” என்ற அடையாளம் கிடைத்தது.

இதுமட்டுமின்றி, இந்த படத்திற்கு பின் தான், அஜித் முழுமையான ஆக்ஷன் ஹீரோ என்ற நிலையை அடைந்தார். இவ்வாறு பல்வேறு பெருமைகளை கொண்ட இந்த திரைப்படத்தில், முதலில் நடிக்க இருந்தது வேறு நடிகர் தானாம்.

அதாவது, நடிகர் பிரசாந்த் தான் தீனா படத்தில் நடிக்க இருந்தாராம். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக, அந்த படத்தில் பிரசாந்தால், நடிக்க முடியவில்லையாம்.

ஒருவேளை, பிரசாந்த் அந்த படத்தில் நடித்திருந்தால், அவருக்கு தான் தல என்ற பட்டம் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top