Connect with us

Raj News Tamil

அதிதி ஷங்கரின் அடுத்த ஹீரோ யார்? வெளியான அப்டேட்!

சினிமா

அதிதி ஷங்கரின் அடுத்த ஹீரோ யார்? வெளியான அப்டேட்!

விருமன், மாவீரன் ஆகிய இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளவர் அதிதி ஷங்கர்.

இவர் அடுத்து எந்த திரைப்படத்தில் நடிப்பார் என்பதை அறிய, ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பில்லா, ஆரம்பம் என்று பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் விஷ்னு வர்தன். இவர் தற்போது, அதர்வாவின் தம்பி ஆகாஷ் என்பவரை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இதில் தான், நடிகை அதிதி ஷங்கர் அடுத்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை, போர்ச்சுக்கல் நாட்டில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

முதல் இரண்டு படங்களில் வெற்றியை பெற்ற அதிதி ஷங்கர், ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More in சினிமா

To Top