Connect with us

Raj News Tamil

வெற்றி பெற்ற ப்ளு ஸ்டார்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..

சினிமா

வெற்றி பெற்ற ப்ளு ஸ்டார்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..

கபாலி, காலா ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவரது இயக்கத்தில், அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளு ஸ்டார்.

கிரிக்கெட் விளையாட்டிற்குள் இருக்கும் சாதிய பாகுபாட்டை மிகவும் விறுவிறுப்பான முறையில் சொன்ன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதுமட்டுமின்றி, 8 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படக்குழுவினர், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், கேக் வெட்டியுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், இயக்குநர் ஜெயக்குமார், நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, பிரித்வி பாண்டியராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.

More in சினிமா

To Top