Connect with us

Raj News Tamil

பஸ்-வேன் மோதி விபத்து; தீயில் கருகி 18 பேர் உயிரிழப்பு!

உலகம்

பஸ்-வேன் மோதி விபத்து; தீயில் கருகி 18 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பஸ்-வேன் மோதி விபத்துக்குள்ளானதில் தீயில் கருகி 18 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி வழக்கம்போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, 40 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே எரிபொருள் ஏற்றி வந்த வேனின் மீது பயங்கரமாக மோதியது.

மோதியதில் பஸ் மற்றும் வேன் தீப்பற்றி எரிந்தன. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட18 பேர் தீயில் கருகி பலியாகினர். படுகாயமடைந்த 16 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த கோர விபத்தில் பஸ் மற்றும் வேன் டிரைவர்கள் இருவரும் இறந்துவிட்டனர்.

விபத்து குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in உலகம்

To Top