கலிபோர்னியாவில் கடுமையான பனிப்புயல் – ஐந்து பேர் பலி..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மேலும் மின் இணைப்புகளும் சேதமடைந்தன.

இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகள் பனியால் மூடப்பட்டு இருந்தது. சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது.

இந்த பனிப்புயலில் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன. இந்த மரங்கள் விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேலும் கடும் குளிருக்கு 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரித்து உள்ளது