Connect with us

Raj News Tamil

சந்திரமுகி 2 முக்கிய அப்டேட்!

சினிமா

சந்திரமுகி 2 முக்கிய அப்டேட்!

ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, நாசர், ஜோதிகா ஆகியோர் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில், கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி.

பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், 1 வருடத்திற்கு மேலாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. தற்போது, இந்த படத்தின் 2-ஆம் பாகத்தை, இயக்குநர் பி.வாசு உருவாக்கி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், வடிவேலு, கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. அதாவது, இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், அடுத்த மாதம் வெளியாக உள்ளதாம்.

இதுமட்டுமின்றி, வரும் 22-ஆம் தேதி அன்று, இப்படத்தின் பின்னணி இசை கோர்க்கும் பணியும் தொடங்கப்பட உள்ளதாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அந்த பாடலுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More in சினிமா

To Top