Connect with us

Raj News Tamil

சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தமிழகம்

சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் தணிகாச்சலம் தெருவில் 60 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை இடிப்பதற்காக வீட்டின் உரிமையாளர் சென்னை மாநகராட்சியில் அனுமதி வாங்கி வைத்திருந்த நிலையில் மின்சார வாரியம் மட்டும் அனுமதி வழங்காமல் 20 முறைக்கும் மேல் அலைக்கழித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்மழை காரணமாக இன்று காலை பழமையான இந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கட்டிடம் இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஆட்டோ சேதமடைந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் சேதமடைந்த கார் மற்றும் ஆட்டோவை மீட்டனர். இந்த விபத்து குறித்து ஜாம்பஜார் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top