Connect with us

Raj News Tamil

“Marriage பண்ணிக்கோங்க Please” – பெண்களிடம் கெஞ்சும் சீன அரசாங்கம்!

உலகம்

“Marriage பண்ணிக்கோங்க Please” – பெண்களிடம் கெஞ்சும் சீன அரசாங்கம்!

உலக மக்கள் தொகை பட்டியலில், நீண்ட நாட்களாக சீனா தான் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்போது, இந்தியா முதலிடத்தை பிடித்துவிட்டது. இதற்கு காரணம் என்னவென்றால், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான். அதாவது, கடந்த 1980 முதல் 2015-ஆம் ஆண்டு வரை, ஒரு குழந்தை ஒரு பெற்றோர் என்ற திட்டம், சீன அரசாங்கத்தால், அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தால், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சீன அரசாங்கம் நம்பியது. அவர்கள் நினைத்ததை போலவே, ஆண்டுக்கு 1.1 சதவீதம் மக்கள் தொகை குறைந்தது. கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக, சீன மக்கள் தொகை 2022ல் கடுமையாக சரிந்தது.

மக்கள் தொகை குறைவது நல்லது என்று நீங்கள் நினைத்தால், அதுதான் தவறு. அதாவது, ஒரு நாட்டில் உழைக்கும் மக்கள் குறைய குறைய, அந்நாட்டின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். இதனால், பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் முதியவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்க வேண்டும்.

அப்போது தான் நாட்டில் துடிப்பு மிக்க பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள முடியும். ஆனால், சீனா கொண்டு வந்த இந்த திட்டத்தால், அந்த சமநிலை உடைந்து, பெரும் பாதிப்பை அந்நாட்டு அரசாங்கம் சந்தித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக, பல்வேறு விதங்களில், சீனா அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட, கல்லூரி மாணவர்களுக்கு, காதலிப்பதற்காக விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இன்னும் சில புதிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை சீனா முன்னெடுத்து வருகிறது. உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள், திருமணம் செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவித்தன. அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு வரிச் சலுகை, வீடு கட்ட மானியம், மூன்றாவது குழந்தைக்கு சிறப்பு மானியம் உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்தது.

திருமணம், மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமான பல்வேறு திட்டங்களை சீன அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இது குறித்து பெண்கள் மத்தியில் தீவிர பிரசாரத்தை துவக்கி உள்ளது.

இதில், திருமணத்தின் முக்கியத்துவம், சரியான வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியம், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை பெற்றோர் பகிர்ந்து கொள்வது, திருமணத்துக்கான வரதட்சணை தொகையை குறைப்பது உள்ளிட்டவை குறித்து தீவிர பிரசாரத்தை துவக்கி உள்ளது.ஏற்கனவே பீஜிங் உட்பட 20 நகரங்களில் இந்த பிரசாரம் துவங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல்வேறு நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top