Connect with us

Raj News Tamil

நீ நடிக்கவே வேணாம்…கிளம்பு…வடிவேலுவை விரட்டிய பாரதிராஜா…எப்ப நடந்தது தெரியுமா??

சினிமா

நீ நடிக்கவே வேணாம்…கிளம்பு…வடிவேலுவை விரட்டிய பாரதிராஜா…எப்ப நடந்தது தெரியுமா??

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார். வடிவேலுவின் ரியாக்‌ஷன்கள் தான் இன்று மீம் டெம்பிளேட்டாக சோசியல் மீடியா முழுவதும் ஆக்கிரமித்து உள்ளன. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களிடம் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில், கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட வடிவேலுவை பாரதிராஜா விரட்டிவிட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே படத்தில் வடிவேலு நடித்திருந்தார்.

இதற்காக அவர் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார்.இதனால் கடுப்பான பாரதிராஜா “நீ நடிக்கவே வேணாம் கிளம்பு ” என வடிவேலுவை விரட்டியுள்ளார். இதனால் வடிவேலு கண்ணீருடன் அங்கிருந்து சென்றிருக்கிறார்.

இதைப்பார்த்த அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, வடிவேலுவிடம் கேட்க, அவரும் நடந்ததை கூறி இருக்கிறார். அதன் பிறகு வடிவேலு கேட்ட ரூ.25 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியிலும் பகிர்ந்திருந்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top