Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

தமிழகம்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

கிறிஸ்தவர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “உலக மக்களின் நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்த கருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.”

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top