Connect with us

Raj News Tamil

”லவ் டு டே”பாணியில் சிக்கிய மணமகன்..! போக்சோவில் கைது..?

சினிமா

”லவ் டு டே”பாணியில் சிக்கிய மணமகன்..! போக்சோவில் கைது..?

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். ஆம்புலன்ஸ் ஓட்டுனரான இவருக்கு, அண்மையில் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான லவ் டு டே பட பாணியில் அரவிந்தின் செல்போனை, நிச்சயிக்கப்பட்ட பெண் வாங்கி பார்த்துள்ளார். பிறகு அதனை சோதனை செய்த அவர், அதில் சிறுமி ஒருவரின் அரை நிர்வாண வீடியோ இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து போலிஸுக்கு மணப்பெண் தகவல் கொடுக்க, அரவிந்த் கையும் களவுமாக சிக்கினார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, அவரை அரை நிர்வாணமாக வீடியோ எடுத்ததும், பின்னர் அதனை அழிக்காமல் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைந்தொடர்ந்து அரவிந்த் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார், மேலும் இதே போன்று வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளாரா..? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top