Connect with us

Raj News Tamil

காதலுக்காக மதம் மாறுவாங்க.. ஆனா.. இவரு எதை மாத்தியிருக்காரு தெரியுமா?

இந்தியா

காதலுக்காக மதம் மாறுவாங்க.. ஆனா.. இவரு எதை மாத்தியிருக்காரு தெரியுமா?

காதலுக்காக, மதம் மாறும் சம்பவங்களை, அவ்வப்போது நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், இங்கு ஒரு நபர், தனது காதலிக்காக, எதை மாற்றியிருக்கிறார் என்று அறிந்தால், அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.

அதாவது, மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் பகுதியை சேர்ந்தவர் அல்கா சோனி. பிறக்கும்போது பெண்ணாக பிறந்த இவர், சில வருடங்களுக்கு பிறகு, தான் பெண் அல்ல என்பதையும், ஆண் என்பதையும் உணர்ந்துள்ளார்.

இதையடுத்து, பெண்களுக்கான உடையை துறந்து, ஆணாகவே வாழ ஆரம்பித்துள்ளார். மேலும், தன்னுடைய பெயரை அஸ்திவா என்றும் மாற்றிக் கொண்டுள்ளார். இந்நிலையில், இவருக்கும், ஆஸ்தா என்ற பெண்ணுக்கும் இடையே, காதல் ஏற்பட்டுள்ளது.

நீண்ட காலமாக காதலை தொடர்ந்த இவர்கள் இரண்டு பேரும், ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்தனர். இதனால், வெறுமனே ஆணாக உடைகள், பழக்க வழக்கங்களை மட்டுமே மேற்கொண்டிருந்த அஸ்திவா, தற்போது தனது பாலினத்தை அறுவை சிகிச்சை மூலம், மாற்றிக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அஸ்திவாவும், ஆஸ்தாவும், கடந்த 11-ஆம் தேதி அன்று, திருமணம் செய்துக் கொண்டனர். இருவீட்டு பெற்றோரின் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணம், இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

More in இந்தியா

To Top